ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேர் கைது

ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-02 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி வ.உ.சி. ரோடு அருகே 2 வாலிபர்கள் கையில் நீண்ட வாளுடன் அப்பகுதியில் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (வயது 19), பிரகாஷ் (வயது 25) என தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்