சின்ன திருப்பதியில் 2¼ கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது-மோட்டார் சைக்கிள் பறிமுதல்
சின்ன திருப்பதியில் 2¼ கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கன்னங்குறிச்சி:
சின்ன திருப்பதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர்.
இதில் சுமார் 2¼ கிலோ கஞ்சா மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், சின்ன திருப்பதியை சேர்ந்த நவீன் (வயது 25) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வாங்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நவீனை கைது செய்ததுடன், கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.