நல்லம்பள்ளி:
அதியமான்கோட்டை மேல்காளியம்மன் கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பதாக அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் அமர்ந்திருந்த அப்பனஅள்ளிகோம்பை கிராமத்தை சேர்ந்த ராமன் (வயது 41) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ராமன் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. பின்னர் ராமனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.300 மதிப்புள்ள வெளி மாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.