நங்கவள்ளி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது
நங்கவள்ளி அருகே சேவல் சண்டை நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேச்சேரி:
நங்கவள்ளி அருகே சின்ன சோரகை தேங்காய் கொட்டை பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் விரைந்து சென்ற போது, 3 மோட்டார் சைக்கிள்களை வட்டமாக நிறுத்தி கொண்டு சேவல் சண்டை நடத்தி கொண்டிருந்தனர். உடனே போலீசார் அங்கு சேவல் சண்டை நடத்திய 5 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர்கள் சின்னசோரகை கொசப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 50), ஓமலூர் அருகே பாரக்கல்லூரை சேர்ந்த தங்கதுரை (31), எடப்பாடி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பன்னீர் (32), சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜ் துரை (28), பெரிய சோரகை லட்சுமணன் (22) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.