வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார்.
ஓமலூர்:
ஓமலூரை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டி பள்ளர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 41). கூலி தொழிலாளி. இவர், அவரது வீட்டுக்கு பின்புறம் கஞ்சா செடி வளர்த்ததாக தெரிகிறது. இதனை அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சண்முகம் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு ஆளுயர கஞ்சா செடி வளர்ந்து இருந்தது. உடனே போலீசார் அந்த கஞ்சா செடியை வேருடன் பிடுங்கினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா செடி வளர்த்த சண்முகத்தை கைது செய்தனர்.