பேரிகை அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

Update: 2022-11-10 18:45 GMT

ஓசூர்:

பேரிகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சொன்னேபுரம், பி.குருபரப்பள்ளி பகுதியில் பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை விற்பனை செய்த சொன்னேபுரம் ஹரீஷ் (வயது 29), செந்தில்குமார் (40), பி.குருபரப்பள்ளி மூர்த்தி (44) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்