விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட முதியவர் கைது

விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்ட முதியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-10 18:45 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அடுத்த எருமாம்பட்டி கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் பாலக்கோடு அடுத்த எருமாம்பட்டி கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில், பச்சியப்பன் (வயது 60) என்பவர் தனது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் பச்சியப்பனை கைது செய்து அவரிடமிருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்