தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நடூர் பகுதியை சேர்ந்தவர் காந்தி (வயது 36). மருங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் ஓவியராஜன் (40). இவர்கள் இருவரும் தொழிலாளிகள். இந்த நிலையில் தஞ்சையை அடுத்த மருங்குளம் பகுதியில் உள்ள மதுபான கடையில் சம்பவதன்று காந்தி, ஓவியராஜன் ஆகிய 2 பேரும் மது அருந்தி கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஓவியராஜன், காந்தியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரயில் அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் ஓவியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.