மதுபாட்டில்களை திருடிய 3 பேர் கைது

மதுபாட்டில்களை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-03 18:45 GMT

தேவகோட்டை, 

தேவகோட்டை அருகே உள்ளது புளியால் கிராமம். இங்கு அரசு டாஸ்மாக் கடை உள்ளது. ஊருக்கு ஒதுக்கப்புறமாக சுடுகாடு அருகே உள்ள இந்த கடை தேவர் குருபூஜையையொட்டி 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் கடை பூட்டப்பட்டிருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்ம நபர்கள் கடையின் பின்புறம் வழியாக ஓட்டை போட்டு உள்ளே புகுந்து மது பாட்டில்களை திருடி சென்று குறைந்த விலைக்கு விற்றனர்.

இந்நிலையில் கடந்த 1-ந் தேதி கடை மேற்பார்வையாளர் கடையை திறந்தார். அப்போது கடையின் பின்புறத்தில் இருந்து வெளிச்சம் வந்ததை கண்டு அங்கு சென்று பார்த்த போது சுவரில் ஓட்டை போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் கடையில் இருந்த மது பாட்டில்களை கணக்கெடுத்தபோது நூற்றுக்கணக்கான மதுபாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கடையில் துளை போட்டு மதுபாட்டில்களை திருடியது புளியால் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார், பருத்தியூர் சத்யப்பிரியன், மடத்தேந்தல் பால்பாண்டி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்