விவசாயி கொலை வழக்கில் வாலிபர் கைது

தர்மபுரி அருகே விவசாயி கொலை வழக்கு தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த வாலிபர் ஒருவரை கிருஷ்ணாபுரம் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-21 19:00 GMT

விவசாயி கொலை

தர்மபுரி மாவட்டம் மாவடிப்பட்டி தெற்கத்தியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 52), விவசாயி. இவருடைய முதல் மனைவி சந்திரா. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் முனியப்பன், பிரியா (37) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற முனியப்பன் கிருஷ்ணாபுரம் அருகே ஒரு பள்ளத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

ஒருவர் கைது

இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சர்மிளா பானு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கூலிப்படையை சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது.

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மாதேமங்கலம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் குமார் (28) போலீசாரிடம் சிக்கினார். அவரை கிருஷ்ணாபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்த கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்