50 பவுன் தங்க காசு, ரூ.36 லட்சம் மோசடி; வங்கி மேலாளர் கைது

50 பவுன் தங்க காசு, ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-18 18:45 GMT

தேவகோட்டை வட்டாரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் அல்லா ஹையர் சையது (வயது 68). சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்து அந்த பணத்தை வைத்திருந்தார். அல்லா ஹையர் சையது தினசரி காலையில் நடை பயிற்சிக்கு செல்லும்போது தேவகோட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரியும் பாலகிருஷ்ணன் (59) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர் ஆனார்.

இந்நிலையில் அல்லா ஹையர் சையது இடத்தை விற்பனை செய்து பணம் வைத்திருப்பதை அறிந்து அந்த பணத்தை தன்னுடைய வங்கியில் டெபாசிட் செய்யும்படியும், இதனால் கூடுதல் வட்டி கிடைக்கும் என்றும் பாலகிருஷ்ணன் கூறினாராம்.

இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.90 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய அவர் சென்றபோது பாலகிருஷ்ணன் அந்த பணத்தை அதே வங்கியில் உள்ள அவருடைய லாக்கரில் வைத்துக்கொள்ளும் படியும், அதை வேறு வகையில் முதலீடு செய்து கூடுதல் லாபம் பெறலாம் என்றும் தெரிவித்தாராம். அதன்படி அல்லா ஹையர் செய்யது அந்த பணத்தை தன்னுடைய லாக்கரில் வைத்தார்.

பின்னர் 50 பவுன் தங்க காசுகளை வாங்கும் படி கூறினாராம். அவர் கூறியபடியே அல்லா ஹையர் செய்யதும் 50 பவுன் தங்க காசுகளை வாங்கினார். இதற்கிடையே பாலகிருஷ்ணன், அவரிடம் இருந்து ரூ.36 லட்சம் மற்றும் 50 பவுன் தங்க காசுகளை வாங்கியதாகவும், பின்னர் அதை திருப்பி தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் அல்லாஹ் ஹையர் செய்யது புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நர்மதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து வங்கி மேலாளர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்