பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடியை அடுத்த கொண்டகரஅள்ளியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 54). கூலித் தொழிலாளி. இவர் கடத்தூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் அருள்குமார் (31) என்பவரிடம் பணம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அருள்குமார் தனது கூட்டாளிகள் 3 பேருடன் சேர்ந்து, மாரிமுத்துவை வேனில் கடத்தினார். இதுகுறித்து மாரிமுத்து மனைவி சித்ரா பொம்மிடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் தொழிலாளி மாரிமுத்துவை கடத்திய அருள்குமாரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.