பாலக்கோடு அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

Update: 2022-10-10 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பாலக்கோடு அருகே பி.கொல்லஅள்ளி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 22) என்பதும், அவர் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்