வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கியவர் பிடிபட்டார்
வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கியவர் பிடிபட்டார்.
மேச்சேரி:
மேச்சேரி அருகே உள்ள சித்திக்குள்ளனூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்க்ள் மாதையன், சாந்தி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 498 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. வீட்டில் இருந்த வாலிபரிடம் விசாரித்தபோது அவர், மேட்டூர் குஞ்சாண்டியூர் செங்காடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 29) என்பதும், இளம்பிள்ளையை சேர்ந்த சரவணன் என்பவருக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் சரவணனை தேடி வருகின்றனர்.