பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம்-டிரைவர் கைது
பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்:
ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 22). சரக்கு வாகன டிரைவர். இவர் 18 வயதான பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் ரூரல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிரைவர் தினேஷ்குமாரை கைது செய்தனர்.