புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது

Update: 2022-09-27 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

நாகரசம்பட்டி போலீசார் நேற்று முன்தினம் செல்லம்பட்டி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவருடைய பையை போலீசார் சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான குட்கா, ஹான்ஸ், பான்மசாலா ஆகியவை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்தபோது, மலையாண்டஅள்ளியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததுடன், 17 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்