கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பெரியார் நகரை சேர்ந்தவர் பாலாஜி குமார் (வயது 30). கூலித் தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளை இரவு வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்தநிலையில் மர்மநபர் ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளின் பூட்டை உடைத்து திருட முயன்றார். இதை பார்த்த பாலாஜி குமார் அந்த நபரை பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தார்.
பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்த சத்யமூர்த்தி (21) என்பதும், அவர் மீது கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் திருட்டு, அடிதடி வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சத்யமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.