பர்கூர்:
பர்கூர் போலீசார் போதை பொருட்கள் மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பர்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். ஒப்பதவாடி பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை செய்த போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விற்பனை செய்த சதீஷ் (வயது 38) என்பவரை கைது செய்தனர்.