காரில் ஆடு திருடிய 3 பேர் கைது
காரில் ஆடு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டார்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சீராத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 60). இவர் தனது ஆடுகளை தச்சனேந்தல் பொட்ட கண்மாயில் மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது காரில் பாப்பாக்குடி கிராமத்தை சேர்ந்த அருண்குமார்(வயது19), ரமேஷ் (19) மற்றும் மகாராஜன்(20) ஆகியோர் அங்கு வந்தனர். காரை மகாராஜன் ஓட்டினார்.
இந்நிலையில் அருண்குமார், ரமேஷ் ஆகியோர் 2 ஆடுகளை திருடிக்கொண்டு காரில் தப்பி சென்றனர்.
இதுகுறித்து ரவி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது ெசய்தனர்.
அவர்களிடம் இருந்து கார் மற்றும் ஆடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.