இளையான்குடி,
இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதிகரை பஸ் நிறுத்தம் அருகே திருவுடையார்புரம் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 37) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.