சிங்காரப்பேட்டை அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கியவர் கைது

Update: 2022-09-24 18:45 GMT


ஊத்தங்கரை:

சிங்காரப்பேட்டை அருகே உள்ள மிட்டப்பள்ளி காமராஜ் நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 35). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதேபகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (46). இவர் ஜெகநாதனின் தங்கையை திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் அண்ணாமலை, அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதுகுறித்து அந்த பெண்ணின் அண்ணன் ஜெகநாதன், அண்ணாமலையிடம் கேட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த அண்ணாமலை, ஜெகநாதனை கல்லால் தாக்கினார். இதில் காயம் அடைந்த ஜெகநாதன் சிங்காரப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலையை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்