பெட்டிக்கடையில் குட்கா விற்ற 3 பேர் கைது

Update: 2022-09-24 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீசார் பேகேப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையை சோதனை செய்ததில், அங்கு தடை செய்யப்பட்ட 4 கிலோ ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. அதை விற்பனைக்காக வைத்திருந்த மோகன்குமார் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பாகலூரில் மாரசந்திரம் பகுதியில் பெட்டிக் கடையில் குட்கா விற்ற முனியப்பா (50), சத்யமங்கலத்தில் பெட்டிக் கடையில் குட்கா விற்ற அமராவதி (50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்