தொழிலாளி மீது தாக்குதல்; சிறுவன் உள்பட 2 பேர் கைது

Update: 2022-09-21 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள பூவத்தி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் மூர்த்தி (வயது 32). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் திவாகர், பிரவீன் குமார் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் மூர்த்தியை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மூர்த்தி சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரவீன் குமார், 17 வயது சிறுவனை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்