குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-20 21:06 GMT

சோழவந்தான், 

திருமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் மகன் குண்டார் என்ற சக்திவேல் (வயது37). இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் கடந்த ஜூன் மாதம் மதுரை சிறைச்சாலையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தபோது அவரை காரில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் மோதி சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுந்தரம் மற்றும் காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடிவந்தனர். இந்தநிலையில் திருமங்கலத்தை சேர்ந்த ரமேஷ் பாபு (வயது28), சுகுமார் (29), சபரிநாதன் (35) மற்றும் ஆனையூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் குமார் ஆகிய 4 பேரும் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்தநிலையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ்சேகர், பல்வேறு வழக்கில் சம்பந்தப்பட்ட திருமங்கலத்தைச் சேர்ந்த ரமேஷ்பாபு, சபரிநாதன், சுகுமார் மற்றும் ஆனையூர் அலெக்ஸ் குமார் ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்