மாரண்டஅள்ளி அருகே ஜெலட்டின் குச்சி வைத்திருந்த வாலிபர் கைது

Update: 2022-09-20 18:45 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாமியார்நகரில் வாலிபர் ஒருவர் மஞ்சப்பையுடன் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். அவர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த மஞ்சப்பையில் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்ததில் அவர், அதே பகுதியை சேர்ந்த பைரவன் மகன் பெரியண்ணன் (வயது 29) என்பதும், மீன் பிடிப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் ஏற்கனவே ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி மீன் பிடித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் பெரியண்ணனை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்