தனியார் கம்பெனி மேற்பார்வையாளரை கொலை செய்த 5 பேர் கைது

தனியார் கம்பெனி மேற்பார்வையாளரை கொலை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-19 20:32 GMT

அலங்காநல்லூர், 

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கம்மாபட்டியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மகன் பொன்மணி (வயது25). தனியார் மில்லில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.

இதை தொடர்ந்து அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன் மணியை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். பின்னர் நடந்த விசாரணையில் கம்மாபட்டியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் (24), நவீன்குமார் (25), வயலூரை சேர்ந்த முத்துராஜ் (21), கண்ணன் (22), சின்ன இலந்தைகுளம் சிலம்பரசன் (24) ஆகிய 5 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து 5 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்