வியாபாரியிடம் செல்போன் பறித்தவர் கைது

வியாபாரியிடம் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-13 21:57 GMT

சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவர் சேலம் புதிய பஸ் நிலையத்தில் செருப்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் அவருடைய கடைக்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். பின்னர் அவர் திடீரென வியாபாரி ராஜேந்திரன் வைத்திருந்த செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கி பிடித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (49) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் மீட்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்