விவசாயியை தாக்கியவர் கைது

விவசாயியை தாக்கியவர் கைது

Update: 2022-09-09 18:03 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் ஜின்னா தெருவை சேர்ந்தவர் அருண் (வயது 37). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை கருக்கன்சாவடியில் உள்ள தனது மாந்தோப்பிற்கு சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த ஜம்பு என்கிற ஈஸ்வரன் (43) மது குடித்து கொண்டிருந்தார். இதை தட்டி கேட்ட அருணை மதுபோதையில் இருந்த ஈஸ்வரன் மரக்கட்டையால் தாக்கினார். இதில் காயமடைந்த அருண் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்