கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-03 17:09 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த பீசர்பட்டினம் கிராமத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள நாடகமேடை அருகே இருவர் நின்றனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரணை செய்யும் போது ஒருவர் தப்பி ஓடினார். பிடிபட்டவர் அதே பகுதியை சேர்ந்த சமயராஜா (வயது 27) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இயைடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய விஜயராஜனை தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்