பர்கூர் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது

பர்கூர் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்தவர் கைது

Update: 2022-09-01 17:01 GMT

பர்கூர்:

பர்கூர் அடுத்த மல்லப்பாடியை சேர்ந்தவர் பானுமதி (வயது 65). ஓய்வு பெற்ற செவிலியர். இவருடைய கணவர் ராமதாஸ் இறந்து விட்டதால் பானுமதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் வசிப்பவர் யாஸ்மின். இவரது தம்பி மசூத்கான் (35). ஆட்டோ டிரைவரான இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த 31-ந் தேதி மசூத்கான் மல்லப்பாடியில் உள்ள யாஸ்மின் வீட்டுக்கு வந்தார். பின்னர் பானுமதி வீட்டுக்கு சென்ற மசூத்கான் கத்தியை காட்டி மிரட்டி பானுமதியை தாக்கினார். இதையடுத்து மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார். இதில் படுகாயமடைந்த பானுமதி பர்கூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மசூத்கானை தேட வந்தனர். இந்த நிலையில் திருப்பத்தூரில் பஸ்சுக்காக காத்து நின்றபோது மசூத்கானை பர்கூர் இன்ஸ்பெக்டர் சவிதா நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்