2 பேருக்கு வாளால் வெட்டு; 3 பேர் கைது
2 பேரை அரிவாளால் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்புவனம்,
பூவந்தி அருகே திருமாஞ்சோலை கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் கிருஷ்ணன் (வயது 52) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அருகில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் பாண்டியராஜன் (50). பி.வேலாங்குளத்தை சேர்ந்த வேல்பாண்டி (23) என்பவர் டாஸ்மாக் கடைக்கு வந்த போது அவருக்கும், மற்றொருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை பெட்டிக்கடைக்காரர் பாண்டியராஜன் விலக்கி விட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வேல்பாண்டி தனது நண்பர்களான ரஞ்சித்குமார் (27), சூரியா (23), பாண்டியராஜன் (21), அழகுராஜா (31), சரவணகுமார் (31) ஆகியோருடன் சேர்ந்து காவலாளி கிருஷ்ணன், பெட்டிக்கடைக்காரர் பாண்டியராஜன் ஆகியோரை வாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணியன் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமார், சூரியா உள்பட 3 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.