பெங்களூருவில் இருந்து கும்பகோணத்துக்கு குட்கா கடத்த முயன்ற 2 பேர் கைது-கார் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கும்பகோணத்துக்கு குட்கா கடத்த முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-22 15:52 GMT

ஓசூர்:

ஓசூர் டவுன் போலீசார் அமீரியா ஜங்சன் அருகில் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 179 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்மசாலா ஆகியவை இருந்தது. மேலும் கர்நாடக மாநில 48 மது பாட்டில்கள் இருந்தன. இவற்றை பெங்களூருவில் இருந்து கும்பகோணத்துக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து குட்கா, மதுபாட்டில்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை கடத்த முயன்றதாக கும்பகோணத்தை சேர்ந்த பாலாஜி (வயது 40), ராஜா (34) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்