பள்ளிபாளையம் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது 72 பாட்டில்கள் பறிமுதல்

பள்ளிபாளையம் பகுதியில் மது விற்ற 3 பேர் கைது 72 பாட்டில்கள் பறிமுதல்

Update: 2022-08-19 16:26 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் பள்ளிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலம் ரோட்டில் உள்ள பட்டாசு கடை அருகில் ஒரு பையில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேச்சேரியை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 31 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் ஆவரங்காடு எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள சந்தில் பையில் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்த மாது (54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அலமேடு பகுதியை சேர்ந்த சுகந்தன் (23) என்பவர் பெரியகாடு பகுதியில் புதர்மறைவில் 34 மதுபாட்டில்களை வைத்து மறைமுகமாக விற்பனை செய்து கொண்டு இருந்ததைக் கண்டு அவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக நேற்று பள்ளிபாளையம் பகுதியில் 72 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்