ஆபாச படம் காட்டி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
செல்போனில் ஆபாச படம் காட்டி சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 41). இவர் 2 சிறுவர்களிடம் செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுவர்கள் பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து சைல்டுலைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சாமிநாதன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது.
கைது
இதனை தொடர்ந்து சிறுவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.