திருப்புவனம்,
திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்தது கீழடி கிராமம். இங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தபோது, அவர் மதுரை முனிச்சாலை பகுதியை சேர்ந்த வீரபாண்டி (வயது 22) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 260 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.