சேலம் மெய்யனூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது, அங்கு 2 பேர் பான்பராக், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மளிகை கடையில் வேலை செய்த அர்ஜூன் சிங் (வயது 24), நகுல் சிங் (20) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இவர்களுக்கு அரசால் தடை விதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் எப்படி கிடைத்தது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.