கொலை வழக்கில் தேடப்பட்ட வடமாநில வாலிபர் கைது

கொலை வழக்கில் தேடப்பட்ட வடமாநில வாலிபர் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-09 23:25 GMT

மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருடைய மகன் கணேஷ்குரே (வயது 21). இவர் மீது நாக்பூர் போலீசில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அவர் அங்கிருந்து தலைமறைவானார். இவரை பிடிக்க நாக்பூர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். விசாரணையில் கணேஷ்குரே சேலம் ஜீவா நகரில் உள்ள ஒரு மர மில்லில் வேலை பார்த்துக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து நாக்பூர் போலீசார் சம்பவத்தன்று சேலம் வந்தனர். பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட மரமில்லுக்கு சென்று அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த கணேஷ்குரேவை கைது செய்து நாக்பூருக்கு அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்