சங்ககிரியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது
சங்ககிரியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சங்ககிரி:
சங்ககிரி வேளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45). சமையல் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டின் கதவை தாழ்போட்டு விட்டு விட்டு வெளியே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது 1 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் செந்தில்குமார் வீட்டில் திருடியதாக இளம்பிள்ளை எழுமாத்தானூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.