முதியவரை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது
முதியவரை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள டீக்கடை அருகே காத்தான் (வயது 70) என்பவரை மர்மநபர் ஏமாற்றி அவரிடம் இருந்த வீட்டு பத்திரம், செல்போன், ரூ.3 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரை ஏமாற்றிய மருது என்ற ராஜபாண்டியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பவுன் நகை மற்றும் முதியோரின் வீட்டு பத்திரம் மற்றும் செல்போனை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.