புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-24 17:11 GMT

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே உள்ள மேலவெள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47). இவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக திருப்புவனம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணியன் தலைமையில் சென்ற போலீசார் கடையில் சோதனை செய்தபோது, அங்கு 3 சாக்குப்பைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 2256 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. அதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 800 என போலீசார் ெதரிவித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்