சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

சிறுமியை திருமணம் செய்த டிரைவர் போக்சோவில் கைது

Update: 2022-07-12 16:40 GMT

நாமகிரிப்பேட்டை:

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). தனியார் பஸ் டிரைவர். இவருக்கும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஊராட்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறிய மணிகண்டன் அவரை கடத்தி சென்று கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டதோடு மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பரமத்தி சிறையில் அடைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்