குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிய கும்பலை சேர்ந்தவர் குண்டர் சட்டத்தில் கைது

கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிய கும்பலை சேர்ந்தவர் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-30 18:03 GMT

தர்மபுரி பகுதியில் வாகனங்களில் பாலினம் கண்டறியும் ஸ்கேன் எந்திரத்தை எடுத்து சென்று கர்ப்பிணிகளுக்கு கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிந்து கூறிவந்த கும்பலை சேர்ந்த 8 பேரை பாலின தேர்வு தடை செய்தல் சட்டத்தின் கீழ் தர்மபுரி டவுன் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். இந்த சட்ட விரோத செயலில் ஈடுபட்ட கும்பலை திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 37) வழி நடத்தி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரையை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார். இதன்படி சதீஷ்குமாரை தர்மபுரி டவுன் போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்