மூதாட்டியிடம் நகையை பறித்தவர் கைது

மூதாட்டியிடம் நகையை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-27 18:03 GMT

காரைக்குடி, 

காரைக்குடி பாண்டி பஜார் பகுதியில் வசிப்பவர் வாசுதேவன். இவர் அதே பகுதியில் திருமண அழைப் பிதழ்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 63). இவர் வீட்டில் தனியாக இருக்கும் போது கத்தியை காட்டி மிரட்டி கண்ணம்மாள் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிஓடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது கத்தியை காட்டி மிரட்டி சங்கிலி பறித்தவர் அதே பகுதியில் பாதுகாவலராக வேலை பார்த்த திண்டுக்கல் அருகே உள்ள கோபால பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (வயது 60) என்பது தெரியவந்தது. காரைக்குடியில் அவரை கைது செய்து 3 பவுன் சங்கிலியை போலீசார் மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்