மொடக்குறிச்சியில் மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவா் கைது

மொடக்குறிச்சியில் மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவா் கைது

Update: 2022-06-21 20:56 GMT

ஈரோடு

மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் கடந்த 9-ந் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், மாணவி பள்ளிக்கூடத்துக்கு தனியார் பஸ்சில் சென்று வந்தபோது அந்த பஸ்சின் டிரைவரான சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கனாபுரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதும், இந்த பழக்கத்தை வைத்து ஆசை வார்த்தை கூறி மாணவியை ரமேஷ் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும், ரமேஷ் அந்த மாணவியுடன் பவானியில் தங்கியிருப்பதாக மொடக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று நேற்று மாணவியுடன் இருந்த ரமேசை கைது செய்தனர். மேலும், ரமேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாணவி மீட்கப்பட்டு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்