வாழப்பாடியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது

வாழப்பாடியில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-19 22:50 GMT

வாழப்பாடி:

சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின், சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி மற்றும் போலீசார் நேற்று வாழப்பாடி சந்தைப்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 13 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. பின்னர் வேனை ஓட்டி வந்தவரிடம் விசாரணை நடத்திய போது அவர் ஆத்தூரை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பிரசாந்த் (வயது 24) என்பதும், 650 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஆம்னி வேனுடன் 650 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்