சாராயம் விற்றவர் சிக்கினார்
கெங்கவல்லி அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று நடுவலூர் ஊராட்சியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அருங்காட்டு அம்மன் கோவில் அருகே பாக்கெட் சாராயம் விற்றுக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் புங்காவாடி புதூர் ஜெயக்குமார் (வயது 37) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 105 லிட்டர் பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.