சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள புதுவலசை நாடார்தெருவை சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் (வயது32). இவர் 13 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கிடம் புகார் செய்தார். அவரின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தீஸ்வரனை கைது செய்தனர்.