சேலத்தில் ரவுடி உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சேலத்தில் ரவுடி உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-05-27 23:17 GMT

சேலம்:

சேலம் அமானி கொண்டலாம்பட்டி பிள்ளையார் நகர் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 41). சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (40). பூபதி கடந்த மாதம் 25-ந் தேதி நெத்திமேடு பகுதியில் சென்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஜீவானந்தம் என்பவரை கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த மோதிரம் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து சென்றார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதேபோல் குணசேகரன் கடந்த மாதம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த ஒருவரை கத்திமுனையில் மிரட்டி 2 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றார். இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடியான குணசேகரனை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அவர் கடந்த 2013, 2016, 2017 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் பூபதி, குணசேகரன் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சந்திரகலா ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

இதை பரிசீலித்து பூபதி மற்றும் குணசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோடா உத்தரவிட்டார். இதில் குணசேகரன் மீது 5-வது முறையாக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்