மனைவியை அரிவாளால் வெட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது

மோகனூர் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்

Update: 2023-10-25 19:00 GMT

மோகனூர்:

மோகனூர் அடுத்த குமரிபாளையம் ஊராட்சி சின்னத்தம்பி பாளையத்தை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி சவுமியா (30). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சவுமியா லத்துவாடி சக்திநகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்புலிங்கம் மனைவி சவுமியாவிடம் தான் கேட்ட ரூ.5 லட்சத்தை தருமாறு கேட்டாராம். மேலும் விவாகரத்து செய்வதற்கு வெள்ளை பேப்பரில் கையெழுத்து போடும்படி வற்புறுத்தினார். இதற்கு சவுமியா மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஜம்புலிங்கம் தன்னிடம் இருந்த அரிவாளால் சவுமியாவை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த சவுமியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்குப்பதிவு செய்து ஜம்புலிங்கத்தை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்