பாப்பிரெட்டிப்பட்டியில்சந்து கடைக்கு மது விற்பனை;டாஸ்மாக் விற்பனையாளர் கைது250 பாட்டில்கள் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் சந்து கடைக்கு மது விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். அங்கு இருந்த 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-10-11 19:30 GMT

 பாப்பிரெட்டிப்பட்டி:-

பாப்பிரெட்டிப்பட்டியில் சந்து கடைக்கு மது விற்ற டாஸ்மாக் விற்பனையாளர் கைது செய்யப்பட்டார். அங்கு இருந்த 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் ரோந்து

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டதுடன் வாகன தணிக்கை செய்தனர்.

அப்போது வெங்கடசமுத்திரம் பகுதியில் இருந்து பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

டாஸ்மாக் விற்பனையாளர் கைது

அதில் மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக இருந்தது. அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, மதுபாட்டில்களை காரில் கொண்டு வந்தவர் ஜம்மனஹள்ளி பகுதியை சேர்ந்த சக்திவேல் (வயது 45) என்பதும், அவர் வெங்கடசமுத்திரம் நான்குரோடு பகுதியில் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

அவர் காரில் கடத்தி வந்த மதுபாட்டில்கள் அங்குள்ள சந்து கடையில் விற்பனைக்காக கொண்டு சென்றதையும் விசாரணையில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ததுடன், 250 மதுபாட்டில்களயைும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்